ஸ்ரீமஹாகணபதி ஸகாயம்!
ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
மற்றும்
seythigal.in
இணைந்து வழங்கும் ராகு கேது பெயர்ச்சி ஹோமம்
நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தக்ஷிணாயணம் ஆடி மாதம் 11ம் தேதி - 27 - ஜூலை - 2017 வியாழக்கிழமை அன்று சுக்ல பக்ஷ சதுர்த்தியும் உத்திர நக்ஷத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 16.48க்கு பகல் மணி 12.48க்கு துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சி ஆகும் நாயகர்களால் லோகத்திற்கும் நமக்கும் நற்பலன்கள் பெற பிரார்த்தனைகள் அவசியம்.

பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்:
மேஷம் - ஸிம்ஹம் - கன்னி - துலாம் - தனுசு - கும்பம்

பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்:
ரிஷபம் - மிதுனம் - கடகம் - விருச்சிகம் - மகரம் - மீனம்

குறிப்பு:
திருமணத்தடை நீங்க, சந்தாண பாக்கியம் கிடைக்க, வெளிநாடு செல்வதற்கு உள்ள தடை அகல, வீடு மனை வாங்குவதற்கு இருக்கும் சுணக்கம் நீங்குவதற்கு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெற, கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு, தீராத நோய்கள் தீர்வதற்கு போன்ற அனைத்து பிரச்சனைகள் தீர்வதற்கும் ஸங்கல்பத்தில் கலந்து கொள்வது சிறந்தது. அதியற்புத மூலிகைகளை கொண்டு செய்யப்படும் மஹா ஹோமம் இது. அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் நன்மைகள் பெறுக செய்வோம். ஹோமத்தில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை. ஹோமத்திற்கு நல்லெண்ணெய், அரிசி, தேங்காய், நெய் போன்றவை கொடுப்பதால் நமக்கு நன்மைகள் பெருகும். முடிந்தோர் செய்து பயன் பெறலாம். பொருளுதவியாக கொடுக்க நினைப்போர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். வெளியூர் அன்பர்கள், தங்கள் குடும்பத்தினர் அனைவரின் பெயர், நட்சத்திரம் மற்றும் கோத்திரம் இருப்பின் அவற்றை ramjothidar@gmail.com எனற இமெயில் முகவரிக்கு வைக்குமாறு கேட்டு கொள்கிறோம். அனைவருக்கும் ஹோம பிரசாதம், தன ஆகர்ஷணத்தை ஏற்படுத்தும் சிகப்பு சந்தன செட் மற்றும் மந்திரித்த முடிக்கயிறு அனுப்பி வைக்கப்படும்.

நிகழ்ச்சி நிரல்:

காலை 8.00 மணிக்கு: ஸங்கல்பம் ஆரம்பம் - ராகு கேதுவிற்கு லக்ஷ ஆவர்த்தி ஹோமம் ஆரம்பம்
காலை 10.00 மணிக்கு: சிறப்பு பாடல் - கலைச்செல்வி.பூஜிதா
காலை 10.30 மணிக்கு: அம்பத்தூர் கலாக்ஷேத்ரா குழுவினரின் நாகநடனா
முற்பகல் 11.00 மணிக்கு: ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் - ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாம பாராயணம்
நண்பகல் 12.15 மணிக்கு: ராகு கேதுவின் முக்கியத்துவம் - வழங்குபவர்: சொல்லின் அரசி ப்ரியா கிஷோர்
மாலை 4 மணிக்கு: அம்மனின் ஆடல் - வழங்குபவர்: அம்மன் அருள் சுந்தராஜ சர்மா
மாலை 5 மணிக்கு: பூர்ணாகுதி ஆரம்பம் - மஹாபூர்ணாகுதி - ஸ்பர்சாகுதி
மாலை 6 மணிக்கு: ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
வழங்குபவர் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர், பரம்பரை ஜோதிடர் - புரோகிதர்

குறிப்புகள்:

[1] இந்த ஹோமத்தில் அனைவரும் ஸங்கல்பம் செய்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் கிடையாது.
[2] ஹோமம் மற்றும் அன்னதானத்திற்கு பொருளுதவி மற்றும் பண உதவி செய்யலாம்.
[3] ஹோமத்தில் ஸங்கல்பம் செய்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
[4] வெளியூரில் இருக்கும் நபர்களுக்கு ஸங்கல்பம் செய்து பிரசாதம் தபாலில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
[5] ஹோமத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் பிரசாதத்துடன் செல்வ நிலை மேலோங்க தன ஆகர்ஷண சந்தண பாக்கெட் அளிக்கப்படும்.